ஏடிஎம் மெஷினில் தகடு வைத்து பணம் திருடிய வட மாநில நபர் – சிசிடிவி காட்சியுடன் போலீசார் வலைவீச்சு

"North Indian suspect caught on CCTV using a metal plate to steal cash from ATM; police launch search operation."

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் செயல்படும் ஏடிஎம் மையங்களில், வாடிக்கையாளர்களின் பணத்தை ஏமாற்றி திருடும் விதத்தில்  புதுமையான மோசடி நடைபெற்றுவருகின்றது.

ஒரு தொப்பி அணிந்த வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர், ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்து பணம் வெளியே வரும் இடத்தில் சிறிய தகடுகளை வெற்றிகரமாக பொருத்திவிட்டு வெளியே செல்வதாக சிசிடிவி காட்சிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பின்னர், அங்கே வருவோர் ஏடிஎம் கார்டு போட்டு பின் நம்பர் டையல் செய்தாலும் பணம் வெளிவராது. அவர்கள் பணம் வரவில்லை என நினைத்து ஏமாற்றத்துடன் வெளியே சென்றதும், அந்த இளைஞர் மறுபடியும் உள்ளே நுழைந்து தகடுகளை எடுத்து பணத்தை திருடிச் செல்கிறார்.

பல மாதங்களாக இதே முறையில் பல ஏடிஎம் மையங்களில் பணம் திருடியிருப்பது தெரிய வந்துள்ளது. தற்போது அந்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவரை அடையாளம் காண சிசிடிவி காட்சிகள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு பொதுமக்கள் தகவல் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இத்தகைய சம்பவம் வாடிக்கையாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏடிஎம் பயன்படுத்தும் போது எந்தவொரு சிக்கலும் ஏற்பட்டால் உடனடியாக வங்கியையோ, போலீசையோ தொடர்பு கொள்ள வேண்டும் எனவும், சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்து தகவல் வழங்கவும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.