தூத்துக்குடியில் 10ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு உயிரிழப்பு – ஆசிரியர் கண்டித்தல் காரணமா?

"10th-grade student in Thoothukudi dies by suicide, suspected cause is teacher's harsh scolding."


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பரமன்குறிச்சி சமத்துவபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தன்று அவரது வீட்டில் அவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்ததை உறவினர்கள் கண்டு சோகத்தில் மூழ்கினர். உடனடியாக தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவர் சமீபத்தில் தொடர்ந்து பள்ளிக்கு வராமல் விடுமுறை எடுத்ததாகவும், இதற்காக ஆசிரியர்கள் கண்டித்ததாகவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் மாணவர் தற்கொலை செய்திருக்கக்கூடும் என பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் மாணவனின் மரணத்திற்கு யார் காரணம் என்பதை தெளிவுபடுத்தும் வகையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.