
சத்ரபதி சிவாஜியின் மகன் சம்பாஜியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட ’சாவா’ திரைப்படம் அண்மையில் வெளியாகி பெறும் வரவேற்பை பெற்றது.
விக்கி குஷால், ராஷ்மிகா மற்றும் பல முன்னனி நடிகர்கள் நடித்த இப்படம் வெளியாகி ஒரு தரப்பில் நல்ல வரவேற்பை பெற்றது, அதே நேரத்தில் திரைப்படத்தில் அமைந்த ஒரு சில காட்சிகளை வைத்து அவுரங்கசீப்புக்கு எதிராக பல கருத்துகள் எழுந்தன, மேலும் நாக்பூரில் உள்ள அவுரங்கசீப்பின் கல்லரையை அகற்ற கோரி பல இந்து அமைப்பினரலால் நடத்தப்பட்ட போராட்டத்தில் இரு மதத்தினர்க்கு இடையே பெறும் கலவரம் வெடித்து.
தற்போது இந்த திரைப்படம் நாடாளுமன்றத்தில் உள்ள பாலயோகி அரங்கில் சிறப்பு காட்சியாக நாடளுமன்றம் திரையிட உள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் படத்தில் நடித்த பல நடிகர்கள் மற்றும் படக் குழுவினர் கலந்துகொள்வார்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
சாவா திரைப்படத்தில் வரும் காட்சிகளை வைத்தே நாக்பூர் கலவரம் வெடித்து என்பது குறிப்பிடத்தக்கது.