மூதாட்டியிடம் அத்துமீற முயன்ற கட்சி பிரமுகர் தலைமறைவு

“Angry villagers chase away a local party leader accused of attempting to molest a 70-year-old widow in Usilampatti; he is now missing.”

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள முண்டுவேலம்பட்டி பகுதியில், 70 வயது மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில், பார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் கலை அழகேசன் என்ற நபர், கடந்த இரவு அவரது வீட்டுக்குள் நுழைந்துள்ளார் அப்போது மதுபோதையில் இருந்த அவர், மூதாட்டியிடம் அத்துமீறல் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

மூதாட்டியின் கூச்சலால்  அருகாமையில் இருந்த பொதுமக்கள் விரைந்து வந்து சம்பவத்தை தடுக்க முயன்றனர். அத்துடன், தாக்குதலில் ஈடுபட்ட நபரை சம்பவ இடத்திலேயே அடித்து உதைத்து விரட்டி அனுப்பியதாக தெரியவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து, தற்போது கலை அழகேசனை தேடி வருகிறார்கள். 

பாதுகாப்பற்ற நிலையில் வாழும் முதியவர்கள் குறித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்க வேண்டியதின் அவசியத்தை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.