தஞ்சையில் கணவனை காய்கறி கத்தியால் கொன்ற மனைவி கைது

“Thanjavur woman arrested after allegedly killing her husband by striking him on the head with a grinding stone.”

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள ஓலைப்பாடி கிராமத்தில் சோகமான குடும்ப நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது.

அந்த பகுதியில் வசித்து வந்த கலியமூர்த்தி என்பவர், தனது மனைவி சிந்தனைச் செல்வியுடன் அடிக்கடி மது போதையில் சண்டை போடுவதாக கூறப்படுகிறது.

குடும்பத்தில் இதனால் பல முரண்பாடுகள் ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த இரவு வழக்கம் போல் மது அருந்திய நிலையில் வீட்டிற்கு வந்த கலியமூர்த்தி, தனது மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அடித்தாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சிந்தனைச் செல்வி, சமையலறையில் இருந்த காய்கறி வெட்டும் கூர்மையான கத்தியைப் பயன்படுத்தி, கணவனின் இடது கழுத்தில் குத்தியுள்ளார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த , கலியமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உடனடியாக  சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சிந்தனைச் செல்வியை கைது செய்து, வழக்கு பதிவு செய்து மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.