
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற சம்பவம் , சமூக வலைதளங்களில் பரவி, பொதுமக்களின் கவனத்தை பெற்றுள்ளது.
அங்கு சிகிச்சை பெற வந்த ஒருவர் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டபோது, வழமையாக பயன்படுத்தப்படும் ஸ்டேண்டுகள் இல்லாத நிலையில், குளுக்கோஸ் பாட்டிலை ஒருவர் கையில் பிடித்து கொண்டிருக்கும் போது சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது
மருத்துவ வசதிகள் குறைவாகவே இருந்தாலும், இது போன்ற அடிப்படை மருத்துவ உபகரணங்களும் இல்லாமல் இருப்பது, மக்களுக்க நல்லது இல்லையென சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்
இந்த சம்பவம், அரசு மருத்துவமனைகளில் இருந்து மக்கள் எதிர்பார்க்கும் தரமான சிகிச்சை மற்றும் மனிதாபிமான சேவைகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.