
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருவிருந்தாள்புரம் கிராமத்தில் வசித்து வந்த விவசாயி சுந்தரவேலு, தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்துள்ளார்
அவருக்கும், மனைவி பூங்கொடியுக்கும் இடையே வீட்டு வேலைகள், குறிப்பாக குழாயில் தண்ணீர் பிடித்து போன்ற காரணங்களால் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டு வருவது வழக்கமாக இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், இன்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவியின் தலையில் குழவிக் கல்லை போட்டு தாக்கிய சுந்தரவேலு, பின்னர் அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து, “தாயின்றி குழந்தைகள் அனாதையாகிவிடக்கூடாது” என்ற மனநிலை காரணமாக, தனது இரு பெண் குழந்தைகளையும் கொன்றதாக அவர் போலீசில் தெரிவித்துள்ளார்.
சம்பவத்துக்குப் பிறகு, சுந்தரவேலு நிதானமாக அருகிலுள்ள காவல்நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.