சென்னையில் உணவு டெலிவரி ஊழியர் மீது மின்கம்பம் விழுந்து விபத்து!

Electric pole falls on food delivery worker in Chennai, causing an accident.


சென்னை தாம்பரத்தில் உணவு டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்ட சூர்யா என்ற இளைஞர், வாடிக்கையாளருக்குச் சாப்பாடு விநியோகம் செய்து விட்டு, இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க காத்த போது அந்தப் பகுதியில் திடீரென பலத்த காற்று வீசியுள்ளது.

அதன் விளைவாக, அருகில் இருந்த பழைய மற்றும் தளர்ந்த நிலையில் இருந்த மின்கம்பம் ஒன்று பலத்த காற்று காரணமாக  எதிர்பாராத விதத்தில் சூர்யாவின் தலையில் நேரடியாக விழுந்ததில் அவர் கீழே விழுந்து, படுகாயமடைந்தார்.

உடனடியாக அக்கம்  பக்கத்தில் இருந்தவர்கள் தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவரை மேலதிக சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர்.  தற்போது சூர்யா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்களின் தெரிவித்துள்ளனர்