
தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் கொடூர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
அங்கு 3 வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாகி, தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக போலீசார் உறுதி செய்துள்ளனர்.
விசாரணையின்போது, அந்த சிறுமியின் தாய் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஜீவாவுடன் தவறான உறவில் இருந்ததுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
அதே நேரம் ஜீவா என்ற நபர் அந்த 3 வயது சிறுமியை அடிக்கடி துன்புறுத்தி வந்ததும், கொடூரமாக தாக்கி பாலியல் தொல்லை செய்தது சிறுமியை கொலை செய்துள்ளதும் போலீசாரின் விசாரணையில் உறுதியாகியுள்ளது.
ஆனால் இது தகவல்களை மறைப்பதற்காக சிறுமியின் தாய் சடலத்துடன் அங்கும் இங்கும் சுற்றி திரிந்ததுள்ளதும், போலீசாரின் விசாரனையின் போது தெரிவந்ததாக கூறப்படுகின்றது
இந்த சம்பவத்தையடுத்து போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஜீவா, தவறி கீழே விழுந்ததில் வலது காலை எலும்பு முறிந்துள்ளதாகவும், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காவல் கண்காணிப்பில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியிருக்கும் நிலையில், குழந்தைகள் மீது நிகழும் மனிதபிமானமற்ற செயல்களுக்கு சமூக ஊடகங்களில் கண்டனங்கள் பெருகி வருகின்றன. மேலும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.