பங்கு வர்த்தகத்தில் லாபம் பெறலாம் எனக் கூறி ரூ.19 லட்சம் மோசடி – கேரள இளைஞர்கள் திருப்பூரில் கைது

"Kerala youths arrested in Tiruppur for ₹19 lakh fraud promising stock market profits."


பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்கள் வழியாக பலரை நம்பவைத்து பண மோசடி செய்யும் மோசடி கும்பல்கள் கடந்த சில மாதங்களாக வலுப்பெற்று வருகின்றன.

இந்தச் சூழலில், திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் தில்லை ராஜனைப் பங்குச் சந்தை முதலீட்டில் ஈடுபடுத்தும் பெயரில், டெலிகிராம் செயலி மூலம் தொடர்பு கொண்டு, அதே வழியாக அவரிடம் ரூ.19 லட்சம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மோசடிக்கு பிறகு தன்னை ஏமாற்றியதை உணர்ந்த தில்லை ராஜன், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், கேரளாவைச் சேர்ந்த விபின் தாஸ் மற்றும் முனாஸ் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து ரூ.18 லட்சம் பணத்தை பறிமுதல் செய்ததாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாகவும் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.