
உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோ அருகே உள்ள தியோரியா பிரசித்நகர் கிராமத்தில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான கில்வான், அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டிருந்தார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். ஆரம்பத்தில் அமைதியாக இருந்த தம்பதியரின் வாழ்க்கை, மனைவியின் தகாத பழக்கம் மூலமாக உருவான கள்ளக்காதலால் சீரழிந்ததுள்ளது
விவசாயியான கில்வானின் மனைவி, அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் தகாத உறவில் இருந்துள்ளார் இருவரும் தனிமையில் சந்திக்கத் தொடங்கிய சந்தர்ப்பத்தில் இந்த விஷயம் கணவருக்கு தெரியவந்ததுடன், மனைவியை கடுமையாக கண்டித்துள்ளார்.
ஆனால் சம்பவத்தன்று மனைவி தனது கள்ளக்காதலனை சந்திக்க சென்றுள்ளார். அதை பின்தொடர்ந்த விவசாயி, தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கணவர், வீடு திரும்பச் சொல்லியபோது, மனைவி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயி, கள்ளக்காதலனை தாக்கி, பின்னர் மனைவியின் மூக்கை கடித்து துப்பிவிட்டு, அங்கிருந்து தப்பியோடினார்.
மூக்கில் கடித்த காயத்தால் வலியால் தவித்த மனைவியின் அழுகை கேட்ட அப்பகுதியினர் விரைந்து வந்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ரத்தவெள்ளத்தில் கிடந்த பெண்ணை மீட்டு, லக்னோவின் பிஜிஐ மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவருக்கு மூக்கை மீண்டும் இணைக்கும் அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, தப்பியோடிய விவசாயி கில்வானை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிகழ்வு, அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.