விருகம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கும் வீடியோ வைரல் – உதவியாளர் முருகன் மீது குற்றச்சாட்டு

"Viral video shows Assistant Murugan allegedly accepting bribe at Virugambakkam Sub-Registrar Office."

சென்னை நகரின் விருகம்பாக்கம் பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

வீடியோவில், அலுவலக உதவியாளர் முருகன் என்பவர் விடுதலைப் பத்திரம் (release deed) வழங்கும் பணிக்கு ஒருவரிடமிருந்து பணம் வாங்குவது      தெளிவாகப் பதிவாகியுள்ளது.

முக்கியமாக, முருகன் அந்த நபரிடம், “SRO-க்கு கொடுத்து விட்டீர்களா?” என கேட்கும் காட்சி இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளதால் ,  SRO  அலுவலரின் பங்கும் இதில் இருக்குமா என சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, உயரதிகாரிகள் சம்பந்தப்பட்ட அலுவலக ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

மக்கள் பத்திர பதிவு அலுவலகங்களில் தொடர்ந்து லஞ்சம் கேட்கப்படுவதாக ஏற்கனவே பல புகார்கள் எழுந்திருந்த நிலையில், தற்போது  ஆதாரத்துடன் வெளியான இந்த வீடியோ அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . இந்த விவகாரம் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.