
சென்னை புளியந்தோப்பு அருகே உள்ள பி.கே. காலனியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில், கடந்த சில தினங்களுக்கு முன் கலசங்கள் காணாமல் போனதாக கோவில் நிர்வாகம் புகார் அளித்தது.
இதையடுத்து புளியந்தோப்பு போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, அருகிலுள்ள இரும்புக் கடைகளில் கலசங்கள் விற்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
விசாரணையில், இரண்டு சிறுவர்கள் அந்த கலசங்களை திருடி பழைய இரும்பு பொருட்கள் வாங்கும் கடையில் விற்றதாக தெரிந்ததையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
மேலும் கைதான சிறுவர்களிடம் இருந்து மொத்தமாக 5 கலசங்கள் மீட்கப்பட்டன. பின்னர், இருவரும் சட்டப்படி சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் கோவில் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.