
திருப்போரூரைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி ஒருவர், தனது சகோதரருடன் டியூஷன் செல்வதற்காக வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார் .
அந்தச் சமயம், ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவன், மாணவியிடம் தவறான முறையில் நடந்துகொண்டதாக புகார் எழுந்தது.
புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திலிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் சேகரிக்கப்பட்ட போது அதில், முள்ளிப்பாக்கம் புது காலனியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர்மாணவியிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டது தெரிய வந்ததுள்ளது.
இதையடுத்து திருப்போரூர் போலீசார் அவரை கைது செய்தனர்.