ஈரான் ஒருபோதும் சரணடையாது – டிரம்ப் எச்சரிக்கைக்கு அயதுல்லா அலி காமேனி கடும் பதில்

"Ayatollah Ali Khamenei declares Iran will never surrender in response to international pressure."

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தச் சிக்கலில் அமெரிக்கா தலையீடு அதிகரித்துள்ளது. 

இதனையடுத்து, அமெரிக்காவின் அதிபரான டொனால்டு டிரம்ப், ஈரானின் உச்ச அதிகாரி அயதுல்லா அலி காமேனி மீது கடும் எச்சரிக்கை விடுத்தார்.

அதில், “அயதுல்லா காமேனி எங்கு இருக்கிறார் என்பது எங்களுக்கு தெரியும் . ஆனால் நாங்கள் அவரை தாக்குவதில்லை. குறைந்தபட்சம் இப்போதைக்கு இல்லை. எனினும், அமெரிக்க வீரர்கள் மீது ஏவுகணைகள் தாக்கப்படும் நிலை தொடருமானால், நாங்கள் பொறுமையை இழக்கலாம். ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்” என டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளித்த ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, மிகக் கடுமையான கருத்தை வெளியிட்டுள்ளார். “ஈரான் ஒருபோதும் சரணடையாது. இந்த விவகாரத்தில் நாடு முழுவதும் ஒருமித்த நிலைப்பாடு உள்ளது. அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அதற்கான விளைவுகள் சரிசெய்ய முடியாத அளவுக்கு கடுமையானவை ஆகும்” என அவர் எச்சரித்துள்ளார்.

இந்த மோதலான பேச்சுக்கள், மத்திய கிழக்கு பகுதியில் உள்ள நிலைமைக்கு பெரும் பதற்றத்தை உருவாக்கி உள்ளன.