ஏ.டி.எம். பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவத்தில் தீடிர் திருப்பம்!

"Sudden twist revealed in ongoing ATM robbery investigation."

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே பரபரப்பை ஏற்படுத்திய ஏ.டி.எம். பணக் கொள்ளை வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ஏ.டி.எம். இயந்திரத்தில் நிரப்புவதற்காக கொண்டு செல்லப்பட்ட ரூ.29 லட்சம் பணம், வழியில் மர்மமாகக் காணாமல் போனது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்கில், அந்தப் பணத்தை எடுத்துச் சென்ற நாகர்ஜுன் என்பவர், தொடர்ந்து மாறுபட்ட தகவல்களை கூறியதால் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், நாகர்ஜுன்  தனது நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டதை உறுதி செய்துள்ளனர். இதற்கமைய நாகர்ஜுன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும், பணத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.