
போலீஸ் அதெிகாரிகள் போல நடித்து கேரள நகை வியாபாரிகளிடம் ரூ.25 லட்சம் பணத்தை பறித்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்த நகை வியாபாரிகள் அபூபக்கர் மற்றும் பக்ருதீன் ஆகியோர், கோவையில் நகைகளை விற்று பெற்ற தொகையை எடுத்துக் கொண்டு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்த போது , அவர்களை மறைமுகமாக கண்காணித்து வந்த குழுவினர், தங்களை போலீசார் என கூறி, போலியான அடையாள அட்டைகளைக் காட்டி அவர்களை மிரட்டியுள்ளனர்
“உங்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை, இது சந்தேகத்திற்கு இடமளிக்கிறது” எனக் கூறி விசாரணை செய்வது போல நடித்து, அவர்களிடம் இருந்த ரூ.25 லட்சம் பணத்தை பறித்து சென்றுள்ளனர்.
நகை வியாபாரிகள் போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட சிசிடிவி காட்சிகள், ரயில்வே புக்கிங் பதிவு உள்ளிட்டவையின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதன் மூலம், அந்த சம்பவத்தில் ஈடுபட்ட நால்வரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து முக்கிய தகவல்களை போலீசார் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும், பறிக்கப்பட்ட தொகையையும் மீட்டெடுக்க நடவடிக்கைகள் தொடருகின்றன.