
ஈரோடு மாவட்டம், ஜீவானந்தம் சாலை புதுமை காலனியைச் சேர்ந்த கிருஷ்ணவேணி என்பவர் அங்கன்வாடி பணியாளராக பணி புரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரை நம்ப வைத்து அந்த நம்பிக்கையைக் கொண்டு, கோவையைச் சேர்ந்த 17 பேரிடம் மொத்தமாக ரூ.60 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார்
ஆனால், முறையான பதில்கள் எதுவும் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தவர்களில் ஒருவரான பூந்துறையைச் சேர்ந்த சுரேஷ், ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்ட போலீசார் கிருஷ்ணவேணியை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்து்ள்ளனர்
இந்த வழக்கு குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அரசு வேலை ஆசையில் ஏமாறும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.