வெளியானது விஜய்யின் கடைசி பட அப்டேட் – எப்போ ரிலீஸ் !?

Vijay's Last Film Update Released - When is the Release

விஜய்யின் கடைசி படமான ‘ஜன நாயகன்’ அப்டேட் வெளியாகி உள்ளது.

விஜய்யின் கடைசி படத்தை KVN தயாரிப்பில், H.வினோத் இயக்குகிறார். பூஜா ஹெக்டே ,பாபி தியோல் மற்றும் பல முன்னனி நடிகர்கள்  நடிக்கும் இப்படத்திற்கு ‘ஜன நாயகன்’ என்ற தலைப்பை அன்மையில் படக்குழு அறிவித்தது.

நடிகர் விஜய் இப்படத்துடன், தனது சினிமா பயணத்தை முடித்து விட்டு, முழுவதுமாக அரசியல் களத்தில் இறங்க போகிறார் என்ற தகவல் முன்னதாகவே அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் அவரது அரசியல் பயணத்திற்கு ஏற்றார் போல் இப்படம் முழுவதும் அரசியல் பிண்ணனி கொண்டு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் வருவதால், படத்தை முன்னதாகவே வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது, அதன் படி அடுத்த ஆண்டு பொங்கலுக்கு முன்பே, ஜனவரி மாதம்  09ஆம் தேதி படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக படக்குழு தற்போது அறிவித்துள்ளது. விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இப்படத்திற்கு காத்திருக்கிறார்கள்.