
பிரபலத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர் 2”, “பொன்னி”, “ஆனந்த ராகம்” உள்ளிட்ட சீரியல்களில் நடித்துவரும் நடிகை ரிஹானா பேகம் மீது தற்போது திருமண மோசடி மற்றும் பண மோசடி சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொழிலதிபர் ராஜ் கண்ணன் என்பவர், ரிஹானா தன்னை திருமணம் செய்து பண மோசடியில் ஈடுபட்டதாக சென்னை பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், ரிஹானா தனது தாயார் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் தனியாக வசிப்பதாக கூறி தன்னுடன் நெருக்கமாக பழகியதாகவும் பின்னர் திருமணத்திற்கும் சம்மதித்து விட்டு திருமணமாகிய பிறகு, தன்னுடன் இணைந்து வாழ மறுத்ததோடு, பணம் தேவை எனக் கூறி 18 லட்சம் ரூபாயை பல பெற்று கொண்டு ஏமாற்றிவிட்தாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து, ரிஹானா, அவரது தாயார் மும்தாஜ் மற்றும் முன்னாள் கணவர் ஹபிபுல்லா ஆகியோர் காவல்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அப்புாது நடிகை ரிஹானா தன்னை சார்ந்த புகார்கள் அனைத்தும் பொய்யானவை என்றும், ராஜ்கண்ணன் தனது நண்பரின் வீட்டில் பிறந்த நாள் விழாவுக்காக அழைத்து வந்து கட்டாயமாகத் தாலி கட்டியதாகவும், தானே தனது நகைகளை விற்று 18.5 லட்சம் ரூபாயை வழங்கி, அந்தத் தொகையுடன் அவர் ஒரு உணவகத்தை தொடங்கியதாகவும் கூறியுள்ளார்.
மேலும், இதற்கான புகாரை கடந்த ஆண்டு மகளிர் ஆணையத்தில் பதிவு செய்ததாகவும், பின்னர் மன்னிப்பு கேட்டதால் அந்த புகாரை வாபஸ் பெற்றதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
தற்போது, இரு தரப்பினரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சீரியல் உலகில் பரிச்சயமான முகமாக இருந்த ரிஹானாவின் இந்த விவகாரம், ரசிகர்களிடையே அதிர்ச்சி மற்றும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.