
பணமோசடி வழக்கு விசாரணையில், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாரின் சகோதரரும் காங்கிரஸ் தலைவருமான டி.கே. சுரேஷுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதில், வரும் ஜூன் 19ஆம் தேதி ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த பணமோசடி வழக்கில் ஐஸ்வர்யா கவுடா என்ற பெண் முன்னாள் காங்கிரஸ் எம்.பி டி.கே.சுரேஷின் சகோதரி என பொய்யாகக் கூறிக்கொண்டு பலரை ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் மாதத்தில், அமலாக்கத்துறை ஐஸ்வர்யாவை கைது செய்தது. அதே வழக்கில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. வினய் குல்கர்னி கைது செய்யப்பட்டிருந்தார்.
தற்போது, இந்த வழக்கின் மேலும் விரிவான விசாரணையின் ஒரு பகுதியாக, டி.கே. சுரேஷிடம் தேவையான விளக்கங்கள் பெறும் நோக்கில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.