கண்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் 2 பெண்கள் பரிதாப மரணம்!

Two women killed in a tragic accident as container lorry overturns.


திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இன்று காலை ஏற்பட்ட சாலை விபத்தில் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோவையிலிருந்து திருப்பூர் நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி, பல்லடம் நால்ரோடு பகுதியில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததுள்ளது

அப்போது சாலையோரமாக இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு பெண்கள், அந்த லாரியின் கீழ் சிக்கி உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து வந்த பல்லடம் போலீசார், மூன்று கிரேன்களின் உதவியுடன் லாரியை தூக்கி, உடல்களை மீட்டனர். பின்னர் இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.

விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநரைக் குறித்தும், விபத்துக்கான காரணம் தொடர்பாகவும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி பார்வையாளர்களை பதறவைத்துள்ளன.