
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் சோனியா காந்தி (வயது 78) உடல்நலக் குறைவு காரணமாக, டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் ஜூன் 15ஆம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சிம்லா பகுதிக்கு பயணம் செய்திருந்த சோனியா காந்தி, அங்கு உயர் இரத்த அழுத்தம் காரணமாகக் காணப்பட்டதால், உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பிறகு வீடு திரும்பியிருந்தார்.
அதையடுத்து, டெல்லியில் அவசர சிகிச்சைக்காக சர் கங்கா ராம் மருத்துவமனைக்கு சென்ற அவர், ஆரம்ப பரிசோதனைகள் மேற்கொண்டிருந்த நிலையில், நேற்று வயிறு தொடர்பான பிரச்சனை காரணமாக மருத்துவமனையின் இரைப்பை சிகிச்சை பிரிவில் (Gastroenterology department) அனுமதிக்கப்பட்டார்.
அவரது சிகிச்சையை மருத்துவமனையின் சிறப்பு குழு தீவிரமாக கவனித்து வருகின்றது.
தற்போது சோனியா காந்தியின் உடல்நிலை நிலை நன்றாக இருப்பதாகவும் , அச்சப்படத் தேவையில்லை என்றும் மருத்துவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு காங்கிரஸ் வட்டாரத்தில் இருந்து வெளிவரும் தகவலின்படி, சோனியா காந்தி விரைவில் பூரண நலம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.