
தமிழ்நாட்டில் கள் இறக்கும் நடவடிக்கைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து, நாம் தமிழர் கட்சியும், தமிழ்நாடு கள் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளும் தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
இதற்கான போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சீமான் கையில் வாளை எடுத்து இன்னும் 6 மாதத்தில் நான் ஆட்சிக்கு வந்ததும் உங்களையெல்லாம் கட்டி வைத்து அடிப்பேன் என எச்சரித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது
மதுபானங்களை டாஸ்மாக் மூலம் அரசு அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்கிற நிலையில், பனை மரத்தில் இருந்து இயற்கையாக கிடைக்கும் கள்ளுக்கு மட்டும் தடை விதிப்பது அரசின் இரட்டைநிலையை வெளிப்படுத்துகிறது என்கிறார்கள்.
இந்த நெருக்கடி சூழலில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது கட்சியின் உழவர் பாசறை சார்பாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பெரியதாழை பகுதியில் நேரடியாக பனை ஏறி கள் இறக்கும் போராட்டத்தை முன்னெடுத்தார்.
பின்னர் மேடையில் உரையாற்றிய அவர், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பனம்பால், தென்னம்பால், ஈச்சம்பால் போன்ற இயற்கை ஊட்டச்சத்துக்கள் கொண்ட பானங்களுக்கு தனி கடைகள் திறக்கப்படும். சீமை சரக்கு தடை செய்யப்படும். மற்ற மாநிலங்களில் அனுமதிக்கப்படும் கள், தமிழ்நாட்டில் மட்டும் ஏன் தடை செய்கிறார்கள்?” எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், “தமிழகத்தில் மட்டும் சாராயத்தை காச்சுபவனும் விற்பனை செய்பவனும் ஒரே ஆளாக இருக்கிறார். அதனால் தான் இயற்கையான களுக்கு எதிராக தடை விதிக்கப்படுகிறது. இது நியாயமற்றது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், உங்களையெல்லாம் பனை மரத்தில் கட்டி வைத்து அடிப்போம் என வாளை கையில் எடுத்து கடுந்தொனியில் எச்சரித்துள்ளார்.
தற்போது அவர் பேசிய இந்த காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது