
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனை திருச்சியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் நேரில் சந்தித்து பேசியுள்ளது சர்சையை ஏற்படுத்தியுள்ளது
இந்த சந்திப்பின் போது, “பேசு பேசு… நல்லா பேசு” எனும் தனது புத்தகத்தை திருமாவளவனுக்கு வைகை செல்வன் பரிசாக வழங்கியதாக கூறப்படுகின்றது.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்று வரும் சில கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் (NDA) இணையும் எண்ணத்துடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அண்மையில் வெளியிட்ட கருத்துகளுக்குப் பின்னர், திருமாவளவனுடன் வைகை செல்வன் பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இது, எதிர்காலத்தில் சில முக்கிய அரசியல் மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
வைகை செல்வனின் இந்த முயற்சி, திமுக கூட்டணியின் ஒரு பகுதியாகத் திகழும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாட்டை மெருகூட்டும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.