டொனால்டு டிரம்பின் புதிய வரி உத்தரவு – பெரியளவில் பாதிக்கபோகும் இந்தியா !!

Donald Trump's New Tax Order - Major Impact on India

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தான் கடைபிடிக்கும்  வர்த்தக கொள்கைகளால் உலகளவில் பெரும் தாக்கதை ஏற்படுத்தியுள்ளதாக பரவலான கருத்துக்கள் வெளியாகியுள்ளது

2 ஆவது முறை அமெரிக்க அதிபராக பதவியேற்ற நாளிலிருந்து கடுமையான வர்த்தக நடைமுறைகளை பின்பற்றிவரும்  டொனால்டு டிரம்ப்  , சமீபத்தில் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு உலக வர்த்தகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில்  சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ள செய்தியில், “வெனிசுலா அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. எனவே, வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் நாடுகள், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவீதம் வரி செலுத்த வேண்டியிருக்கும்,”. இந்த புதிய வரிவிதிப்பு ஏப்ரல் 2ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அவர் தெரிவித்துள்ளார்

இந்த உத்தரவு உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் பெரியளவு  தாக்கத்தை ஏற்படுத்த கூடும் என்று  பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்

வெனிசுலாவின்  எண்ணெய் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கும் சீனா, இந்தியா, ரஷ்யா, ஸ்பெயின், சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் இந்த வரிவிதிப்பு காரணமாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது

அமெரிக்க எரிசக்தித் துறையின் 2023 ம் ஆண்டுக்கான ஆய்வின்படி, வெனிசுலாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மொத்த எண்ணெயில் 68% அளவை சீனா இறக்குமதி செய்துள்ளது.

கடந்த ஆண்டு வெனிசுலாவில் இருந்து அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்த நாடுகளில்  இந்தியாவும் அடங்குகின்றது

2024 ஜனவரி மாதத்தில் மட்டும், இந்தியா வெனிசுலாவில் இருந்து தினமும் சுமார் 191,600 பீப்பாய்கள் எண்ணெயை இறக்குமதி செய்துள்ளதுடன்  பிப்ரவரி மாதத்தில்  254,000 பீப்பாய்களை இறக்குமதி செய்துள்ளது

2024-ல், மொத்தமாக இந்தியா வெனிசுலாவிலிருந்து 2.2 கோடி பீப்பாய்கள் எண்ணெயை இறக்குமதி செய்துள்ளதாக கூறப்படுகின்றது

இவ்வாறிருக்கையில்  இந்த டிரம்பின் புதிய வரி விதிப்பால்  , இந்தியாவும் வெகுவாக பாதிக்கப்படுவதுடன் வெனிசுலாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை தொடரும் பட்சத்தில், அமெரிக்க ஏற்றுமதி பொருட்களுக்கு கூடுதலாக 25% வரி செலுத்த வேண்டிய நிலையும் ஏற்படும்.

எனவே  டிரம்பின் இந்த புதிய வரி விதிப்பு கொள்கைகள் உலகளவில் வர்த்தக போரை  ஏற்படுத்தி வருவதாக  பொருளாதார  ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்

வெனிசுலாவுக்கு எதிராக வரிவிதிப்பு அறிவித்துள்ள போதிலும், அமெரிக்கா தற்போதும் அங்கிருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.