அகமதாபாத் விமான விபத்தில் 265 பேர் உயிரிழப்பு : 5 உடல்கள் உறவினரிடம் ஒப்படைப்பு

Ahmedabad plane crash claims 265 lives, 5 victims’ bodies handed over to their families."

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனின் காட்விக் விமான நிலையம் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் AI-171 (போயிங் 787 ட்ரீம்லைனர்), புறப்பட்ட சில நிமிடங்களிலேயே திடீரென அருகிலுள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வீழ்ந்தது.

விபத்து நேரத்தில் விமானத்தில் இருந்த 242 பயணிகளில் 241 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவ மாணவர் விடுதியில் மதிய உணவுக்காக இருந்த மாணவர்களும் பலர் விபத்தில் பலியாகியுள்ளனர். இதன் காரணமாக மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 265 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீ விபத்தால் பெரும் எண்ணிக்கையில் உடல்கள் எரிந்து கருகி அடையாளம் காண முடியாத நிலை உருவாகியுள்ளது. இதை அடுத்து, டி.என்.ஏ. பரிசோதனை மூலம் அடையாளம் காணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

இதுவரை 215 பேரின் உறவினர்கள் தங்களின் ரத்த மாதிரிகளை மருத்துவ குழுவிடம் ஒப்படைத்துள்ளனர். பரிசோதனை முடிவுகள் கிடைத்தவுடன் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பயங்கரச் சம்பவத்தின் பின்னர் இன்று காலை இந்திய பிரதமர் நரேந்திர மோடி சம்பவ இடத்திற்கு நேரில் சென்றார்

பின்னர் மருத்துவமனையை பார்வையிட்டு காயம் அடைந்தவர்களை , இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஒரே பயணியையும் நேரில் சந்தித்து சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்த விமான விபத்து தேசிய அளவில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. .