சென்னையில் அதிகாலையில் அடுத்தடுத்து செயின் பறிப்பு – அச்சத்தில் மக்கள் !!

Back-to-Back Chain Snatching in Chennai Early Morning Public in Fear

சென்னையில்  இன்று காலை 8 க்கு மேற்பட்ட இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் அதிகாலையில் கடைக்கு சென்ற பெண்கள் மற்றும் வயதானவர்களைக் குறிவைத்து, அடுத்தடுத்து செயின் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.

இன்று அதிகாலை 6 மணி அளவில், வீதியில் நடந்து சென்ற  பெண்களை இலக்கு வைத்து  இருசக்கர வாகனத்தில் வந்த முகமூடி கொள்ளையர்கள் , செயினை பறித்து  தப்பியோடியுள்ளனர்.

வேளச்சேரி பகுதியில் பூ விற்பனை செய்யும் முருகம்மாள் என்பவர், 100 அடி சாலையில் நடந்து சென்ற போது, பின்புறம் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதேபோன்று, வேளச்சேரி டான்சி நகரில் வீட்டு வேலை செய்யும் 70 வயது மூதாட்டி, அதிகாலையில் வேலைக்கு சென்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் அவரது கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

மேலும் அடையாறு இந்திரா நகர் பகுதியில் 54 வயதான லட்சுமி என்பவர், வீட்டில் இருந்து கடைக்கு பொருட்கள் வாங்கச் சென்றபோது,, அவரின் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்கச் செயினை  கொள்ளையர்கள் அறுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.

இந்த தொடர் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் நபர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஒரே நாளில் 8 க்கும் மேற்பட்ட செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளதால், போலீசார் கொள்ளையர்களை பிடிக்க சிறப்பு புலனாய்வு பிரிவினருடன் இணைந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே நேரம் இந்த கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய வடமாநிலத்தைச் சேர்ந்த இருவர்  ஐதராபாத்துக்கு தப்பி செல்ல முயன்ற போது விமான நிலையத்தில் வைத்து
அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்


இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் பொதுமக்களை பாதுகாப்பாக இருக்கும்படி போலீசார் விழிப்புணர்வு அறிவுரைகளையும் வழங்கியுள்ளனர்