அகமதாபாத் விமான விபத்து : முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

Tamil Nadu Chief Minister Stalin offers condolences after the Ahmedabad plane crash.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனின் காட்விக் விமான நிலையத்துக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் AI171, புறப்பட்ட சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கியது.

போயிங் 787 வகைஇந்த விமானத்தில் மொத்தம் 242 பேர் பயணம் செய்திருந்தனர்.

இந்த விபத்து பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்ததால் நிலத்தில் இருந்த கட்டிடங்களும் தீவிர சேதமடைந்துள்ளன.

இந்த சூழ்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இவ்விபத்து குறித்து சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

தனது பதிவில் அவர், “அகமதாபாத்தில் 242 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் AI171 விபத்துக்குள்ளானதில் ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தேன். பாதிக்கப்பட்ட அனைவருடனும், விமானத்தில் இருந்தவர்களின் குடும்பத்தினருடனும் எனது எண்ணங்கள் உள்ளன. மீட்பு மற்றும் நிவாரணத்திற்காக அனைத்து சாத்தியமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், தேசிய மற்றும் மாநில அளவிலான அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.