ஏர் இந்தியா விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழப்பு

Image showing news about former Gujarat CM Vijay Rupani's death in an Air India plane crash.

அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் AI171, புறப்பட்ட சில நிமிடங்களில் மோசமான விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் பலர் உயிரிழந்த நிலையில், விமானத்தில் பிஸ்னஸ் கிளாஸ் பிரிவில் பயணம் செய்த குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

விஜய் ரூபானி 2016 முதல் 2021 வரை குஜராத் மாநில முதல்வராகப் பதவியில் இருந்தவர். மக்களிடையே அறியப்பட்ட அரசியல் தலைவராக விளங்கிய இவர், பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்தில் அவரது உயிரிழப்பு தொடர்பான தகவல் உறுதி செய்யப்படுவதற்காக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது