43 நாட்களேயான குழந்தையை 2-வது மாடியிலிருந்து வீசி கொன்ற தாய் கைது!

Tragic incident: Mother arrested for allegedly killing her 43-day-old infant by throwing the baby from a second-floor building.

சென்னை நீலாங்கரை பகுதியில் வசித்து வரும் கார் ஓட்டுநர் அருண் மற்றும் அவரது மனைவி பாரதி தம்பதிக்கு, கடந்த ஏப்ரல் மாதத்தில் இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.

இந்நிலையில்,  இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை திடீரென காணாமல் போனதாக, பாரதி போலீசில் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

புகாரைதொடர்ந்து விரிவான விசாரணை மேற்கொண்ட போலீசார், அதிர்ச்சிகரமான உண்மை தெரிய வந்துள்ளது 

விசாரணையில், குழந்தைகளை கவனிக்க முடியாமல் மன உளைச்சலில் இருந்த பாரதி, 43 நாட்கள் வயதுடைய ஒரு குழந்தையை 2-வது மாடியில் இருந்து வீசி கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்

இதனையடுத்து போலீசார் பாரதியை கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் வருத்தத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பாசம் நிரம்பிய தாய்மை சில சூழ்நிலைகளில் எப்படி இத்தகைய வன்முறையாய் மாற முடிகிறது என்பதும் postpartum depression என சொல்லப்படும் பிரசவத்துக்கு பிறகான மன அழுத்தம் போன்ற மனநலப் பிரச்சனைகளை உரிய மருத்துவத்துடன் கவனிக்கப்பட வேண்டும் என்பதும் இச்சம்பவம் மூலம் வலியுறுத்தப்படுகிறது.