
சிஎஸ்கேவை அதிர வைத்த ஆட்டோ ஓட்டுநர் மகன் !!
யார் இந்த விக்னேஷ் ??
23 வயதிலியே மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இவர் விளையாடியது எப்படி சாத்தியம் ??
ஐபிஎல்2025: ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட(எல் கிளாசிக்கோ) போட்டியான சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையிலான போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றது. மும்பை அணியை சேர்ந்த அறிமுக வீரரான விக்னேஷ் 3 விக்கெட் எடுத்து அசத்தினார். போட்டியின் முடிவில் எம்.எஸ்.தோனி இவரை வாழ்த்தும் வீடியோ இணைய தளத்தில் வைரலாக பரவியது.
டாஸ் வென்ற சிஎஸ்கே அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது .நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை சேர்த்தது மும்பை அணி.அதிகபட்சமாக திலக் வர்மா 31 ரன்கள்,சூர்ய குமார் யாதவ் 29 ரன்கள் மற்றும் தீபக் சஹார் 28 ரன்களையும் சேர்த்தனர்.
156 என்ற சுலபமான இலக்கை நோக்கி எளிதாக வென்று விடலாம் என்ற சிஎஸ்கேவின் எண்ணத்தில் முட்டுகட்டை போட்டார், மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரரான விக்னேஷ் புத்தூர்.
தனது மாயாஜால பந்து வீச்சால் அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் ருத்துராஜ் உட்பட அடுத்தடுத்து மூன்று விக்கெட்டை கைப்பற்றி சிஎஸ்கேவிற்கு சிம்ப சொப்பனமாக திகழ்ந்தார்.
ஒருபுறம் தொடர்ந்து விக்கெட்டை இழந்தாலும், மறுபுறம் நிதானமாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார் ரவீந்தரா. 156 என்ற இலக்கை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சிஎஸ்கே அணி.
போட்டியின் முடிவில், மும்பை அணிக்காக சிறப்பாக பந்து வீசிய விக்னேஷ் புத்தூரை பாராட்டினார் எம் எஸ் தோனி. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.
யார் இந்த விக்னேஷ்
மும்பை இந்தியன்ஸ் அணியின் இடதுக்கை சுழற்பந்து வீச்சாளரான விக்னேஷ் கேரள மாநிலம் மலபுரத்தை சேர்தவர் ஆவார். சிறுவயது முதலே கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட இவர் தனது 10 வயது முதலே அதற்கான பயிற்சியையும் எடுத்து வந்துள்ளார்.
சிறப்பான ஆட்டத்தின் மூலம் இவரை கேரள கிரிக்கெட் அகாடமி தேர்வு செய்தது, அதன் பின் மாநில அணிக்காக அண்டர் 14, அண்டர் 19, அண்டர் 23 பிரிவுகளில் விளையாடியிருக்கிறார் விக்னேஷ்.
தற்போது கேரள கிரிக்கெட் லீக்கில் அலெப்பி ரிப்பிள்ஸ் (Aleppey Ripples) அணிக்காக அவர் விளையாடி வருகிறார்.
கேரளாவில் 14 வயதுக்குட்டோர் மற்றும் 19 வயதுக்குட்டோருக்கான அணிகளில் விளையாடியுள்ள இவர், கேரள சீனியர் அணியில் இன்னும் இடம் பிடிக்கவில்லை. கேரள கிரிக்கெட் லீக்கில் 3 ஆட்டங்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே அவர் எடுத்துள்ளார். ஆனாலும், அவரது சுழலில் இருந்த மாயாஜாலம் மும்பை இந்தியன்ஸ் அணியை கவர, 30 லட்ச ரூபாய் என்ற அடிப்படைய விலையில் அவரை வாங்கியுள்ளது.
தென் ஆப்ரிக்க டி20 கிரிக்கெட் லீக்கில் எம்ஐ கேப்டவுன் அணியின் பயிற்சியில் வலைப்பந்துவீச்சாளராக செயல்பட்ட பின்னர் ஐபிஎல் தொடரில் விக்னேஷ் புத்தூர் அறிமுகமாகியுள்ளார். முதல் போட்டியிலேயே ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, தீபக் ஹூடா ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அவர் கவனம் ஈர்த்துள்ளார். நேற்றைய ஆட்டம் முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கைகுலுக்கிக் கொண்ட வேளையில், விக்னேஷ் புத்தூரை முதுகில் தட்டிக் கொடுத்தார் தோனி. இந்த தருணத்தை விக்னேஷ் புத்தூர் தனது வாழ்நாளில் ஒருபோதும் மறக்கவே மாட்டார் என்று கூறியுள்ள வர்ணனையாளரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான ரவி சாஸ்திரி, இது விக்னேஷ் புத்தூருக்கு உற்சாகம் தரும் ஒன்றாக இருந்திருக்கும் என்று தெரிவித்தார்.