பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் திடீர் தாக்குதல் !!

Sudden Attack at Famous YouTuber Savukku Shankar's House

தூய்மையாளர்களை பற்றி அவதூறு கருத்துகள் பேசியதாக, பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் தூய்மை பணியாளர்கள் கழிவு நீர் ஊற்றியும். குப்பைகளை கொட்டியும் சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வளைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

சவுக்கு சங்கர் திமுக அரசையும், திமுக அமைச்சர்களையும் தொடர்ந்து விமர்சிப்பதை வாடிக்கையாக வைத்து வந்தார், இது தொடர்பான விவகாரத்தில் கைது செய்யப்பட்டும் இருக்கிறார்.

இந்நிலையில் தூய்மை பணியாளர்களை பற்றி அவதூறாக பேசினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது, இதையெடுத்து இன்று (24_/03/2025) காலையில் 50-கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கீழ்பாக்கத்தில் இருக்கும் அவரது வீட்டின் கதைவை உடைத்து உள்ளே புகுந்து சமையல் பொருட்கள், சமையலறை மற்றும் படுக்கையறை மீது கழிவு நீர் ஊற்றியும், குப்பைகளை கொட்டியும் சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் அவரது தாயருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுளனர். என்று அவரது  X பக்கத்தில் பரபரப்பான வீடியோவை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார்..

இதன் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும், காவல் துறையினர் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் வைத்துள்ளார்.

இச்சம்பவத்தை குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது  X பக்கத்தில் கண்டங்களை தெரிவித்துள்ளார், மேலும் இது ஒரு வன்முறை தாக்குதல் என்றும் குறிப்பிட்டுள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் இதற்கு கடும் கண்டங்களை தெரிவித்துள்ளார். மேலும் இதில் ஈடுபட்டவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது  X பக்கத்தில் தெரிவித்துள்ளார்.