
வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில், மக்கள் கூடும் முக்கிய இடங்களில் புத்தக பூங்காக்களை உருவாக்கும் திட்டத்தை தமிழக அரசு முன்வைத்தது. அதன் தொடர்ச்சியாக சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் ரூ.1.85 கோடி செலவில் நவீன வசதிகளுடன் ஒரு புத்தக பூங்கா உருவாக்கப்பட்டது.
10 ஆயிரம் புத்தகங்களை கொண்ட இந்த புத்தக பூங்கா, நூல்களுக்கான ஆர்வத்தைப் பொதுமக்களிடையே அதிகரிக்க முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று இந்த புத்தக பூங்காவை திறந்து வைத்தார். பின்னர், புத்தகங்களை நேரில் பார்வையிட்டும், வாசிப்பு ஆர்வம் கொண்ட மக்களுடன் உரையாடியும் சிறப்பாக நிகழ்வை முன்னெடுத்தார்.
இந்த முயற்சி, நகர வாழ்வில் புத்தக வாசிப்பு ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்ற அரசின் எண்ணத்தைக் கொண்டே செயல்படுத்தப்பட்டுள்ளது.