
சென்னை தாம்பரம் அருகே உள்ள அரசு பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர், பள்ளி விடுதியில் தங்கியிருந்து கல்வி பயின்று வந்தார். இந்த நிலையில், அந்த விடுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் மேத்யூ, மாணவியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக புகார் எழுந்தது.
சம்பவத்துக்குப் பின்னர் மாணவிக்கு காயம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாணவி கால் முறிவு ஏற்பட்ட நிலையில் மீட்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில், சம்பவத்தில் ஈடுபட்ட விடுதி காவலர் மேத்யூவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பள்ளி விடுதிகளில் மாணவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.