
சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், பா.ஜ.க.வின் மதவாத அரசியலை வலுவாக விமர்சித்தார்.
அவர் கூறியதாவது: “பா.ஜ.க. மாநிலம் விட்டு மாநிலம் மதவாதத்தை அரசியலாக்குகிறது. வட இந்தியாவில் விநாயகர், ராமர், மேற்கு வங்கத்தில் துர்கா, காளி போன்ற கடவுள்களைப் பயன்படுத்தி மக்களை பிரித்து வாக்குகளை சம்பாதிக்கிறது. தற்போது தமிழ்நாட்டில் முருகக் கடவுளின் பெயரை வெதத்து அரசியலை திசை திருப்ப பா.ஜ.க. முயற்சிக்கிறது.”
“ஆனால், தமிழர்கள் மதத்தை அரசியலாக்கும் முயற்சியில் ஒருபோதும் மயங்கப்போவதில்லை. அதே போல தமிழ் கடவுள் முருகனும் இதற்கு மயங்க மாட்டார். அவர் தான் இவர்களை விரட்டியடிப்பார். தமிழகம் மதவாதத்திற்கு இடமில்லை என்பதை 2026-ம் ஆண்டு தேர்தல் மக்கள் உறுதிப்படுத்துவார்கள்” என உறுதியாக தெரிவித்தார்.
திருமாவளவனின் இந்த கூற்று, தமிழக அரசியலில் மதத்தை அடிப்படையாக கொண்டு வாக்கு தேடும் பா.ஜ.க.வின் அணுகுமுறைக்கு எதிராக வெளியாகியுள்ள வலுவான எதிர்ப்பாக பார்க்கப்படுகின்றது