
கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து சென்னை நோக்கி வந்த ஒரு தனியார் ஆம்னி பேருந்தில், சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே பரபரப்பான சம்பவம் நடந்ததுள்ளது
பேருந்தில் நடத்துநரின் இருக்கைக்குப் பின்புறம் அமர்ந்திருந்த 9 வயது சிறுமி, தாயுடன் இணைந்து உறங்கிக்கொண்டிருந்த போது, பேருந்து ஓட்டுநர் ஞானவேல் என்பவர் தனது செல்போனை பயன்படுத்தி சிறுமியை ஆபாசமாக படம் பிடித்ததாக வழிப்பயணிகள் புகார் தெரிவித்தனர்.
இந்த செயலால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயும், மற்ற பயணிகளும் உடனடியாக தலையிட்டு தடுத்து, விழுப்புரம் புறநகர் காவல் நிலையத்தில் போலீசாருக்கு புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில், போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஓட்டுநர் ஞானவேலை கைது செய்தனர். அவர்மீது குழந்தை பாதுகாப்பு சட்டமான போக்சோ (POCSO) சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து புதிய கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இதன் விசாரணை தொடக்க நிலைத்தில் உள்ளதாகவும், மேல் அதிகாரிகள் நேரில் தங்களது கவனத்தை செலுத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.