
திருச்சி நாச்சிகுறிச்சி வாசன் வேலி பகுதியில் விளையாட அனுமதிக்காததால் சிறுமியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
திருச்சி நாச்சிக்குறிச்சி வாசன் வேலி 10வது கிராஸ் பகுதியில் வசிக்கும் லோகேஷ் (வயது 44) என்பவர் பெங்களூருவில் பணியாற்றும் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அவரது மகள் அவந்திகா (வயது 9), உள்ளூர் தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று, கோடை விடுமுறை காரணமாக குழந்தைகள் இருவரும் வீட்டிலேயே இருந்தனர். மதிய நேரத்தில் அவந்திகா வெளியே சென்று விளையாட தனது தந்தையிடம் அனுமதி கேட்டுள்ளார். அதற்கு, வெயில் அதிகமாக உள்ளதால் மாலை நேரத்தில் வெளியே செல்லலாம் என தந்தை கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த அவந்திகா, தனது அறைக்கு சென்று கதவை உள்ளே இருந்து பூட்டிக் கொண்டுள்ளார். சிறிது நேரம் கழித்து மதிய உணவுக்காக அழைத்தபோது, பதிலளிக்காத நிலையில் இருந்ததை பார்த்த குடும்பத்தினர், கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது அந்த சிறுமி, துப்பட்டாவை பயன்படுத்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. உடனடியாக அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இந்த சோகமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தந்தை லோகேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்