எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!

Sri Lankan Navy arrests 8 Rameswaram fishermen for allegedly crossing the maritime border while fishing.

ராமேஸ்வரம் மீனவர்கள் குழு, கச்சத்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தது. அப்போது, அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை துரத்தி பிடித்தனர். இந்த நடவடிக்கையில், ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கைது செய்து, அவர்கள் பயன்படுத்திய ஒரு மீன்பிடி படகையும் பறிமுதல் செய்தனர்.

சமீப மாதங்களில், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது அதிகரித்து வருவதால், தமிழகத்தில் மீனவர் சமூகத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

இந்த பிரச்சினையை தீர்க்கும் வகையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரு நாட்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம், ராமேஸ்வரம் மற்றும் சுற்றுவட்டார மீனவர்கள் இடையே கடும் எதிர்ப்பையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.