
ராணிப்பேட்டை அருகே வசிக்கும் காவேரி என்ற பெண், எடை குறைவாகப் பிறந்த தனது குழந்தைக்கு அரசு தலைமை மருத்துவமனையில் இன்குபேட்டரில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் இன்று காலை சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்ததுள்ளது.
இதனால், மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என கூறி, குழந்தையின் தந்தை அஜித்குமார், உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றார்.
உடனே போலீசார் அவரை தடுத்து நிறுத்தி, சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மருத்துவமனை தரப்பில், தாயிடம் பால் குடித்தபோது புரை ஏறி குழந்தை உயிரிழந்திருக்கலாம் என்றும், இது மருத்துவ அலட்சியமல்ல என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.