கிருஷ்ணகிரி அருகே 7 வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு!

"Massive road accident near Krishnagiri involving 7 vehicles; 4 fatalities reported."


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே குருபரபள்ளி பகுதியில் இன்று (20.07.2025) காலை பெரும் விபத்து நிகழ்ந்தது. கிருஷ்ணகிரி – ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து, சரக்கு வாகனம், 2 கார்கள், லாரி மற்றும் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட மொத்தம் 7 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த தந்தை, மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் லாரி ஓட்டுநரும் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், போலீசார் மற்றும் பொதுமக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில்வந்து மீட்புப் பணிகளை மேற்பார்வை செய்து வருகின்றனர்.

இந்த விபத்து காரணமாக அந்த பாதையில் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடந்த ஒரு வருடமாக இந்த பகுதியில் நடைபெறும் மேம்பாலப் பணிகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

7 வாகனங்கள் மோதிய விபத்தில் 4 உயிர்கள் பறிய, அந்த பகுதிச் சொந்தவாசிகள் பெரும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் உள்ளனர்.