
திருப்பத்தூர் மாவட்டம் காமனூர்தட்டு பகுதியில் மகாவிஷ்ணு என்றவர் குத்தகைக்கு எடுத்துள்ள விவசாய நிலத்தில், 7 பேர் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்தது தெரியவந்தது. இவர்களை வருவாய்துறை வட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மகாவிஷ்ணுவிடம் இருந்து ரூ.10 ஆயிரம் கடன் வாங்கிய காரணத்தால் இவர்களை கட்டாயம் கொத்தடிமையாக வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த 7 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மேலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.