
ராமநாதபுரம் மாவட்டம் கோரைகுளத்தில், மைக் செட் வாடகைக்கு வழங்கும் ஒருவரின் வீட்டின் முன்பு 6 அடி உயர ஸ்பீக்கர் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. நேற்று, அந்த வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சுகவதி என்ற சிறுமி மீது, திடீரென ஸ்பீக்கர் கீழே விழுந்தது.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சிறுமியை, அவரது தந்தை விஜயகாந்த் மற்றும் தாய் கோகிலா விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவர்கள் சுகவதி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில், திடீர் அதிர்ச்சியில் மயங்கியிருந்த கோகிலாவிடம் கூறாமல், விஜயகாந்த் சிறுமியின் உடலை புதைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோகிலா தரப்பினர் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில், போலீசார் சிறுமியின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறாய்வு நடத்தினர். சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.