
தருமபுரி நோக்கிச் சென்ற 2-பி அரசு பேருந்து, சாலையோரத்தில் இருந்த வீட்டின் மீது நேராக மோதியது. இந்த விபத்தில் அந்த வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த அத்விகா என்ற 4 வயது சிறுமி படுகாயமடைந்தார்.
உடனே அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு கொடுத்த சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
ஸ்டீரிங் லாக் ஆனதால் பேருந்தை திருப்ப முடியாமல் விபத்து ஏற்பட்டதாக பேருந்து ஓட்டுநர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.