இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் கைது!

"Sri Lankan Navy arrests four Rameswaram fishermen near maritime border"

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 4 மீனவர்கள் நேற்று விசைப்படகுகளில் கடலுக்குச் சென்று நடுக்கடலில் வழக்கம்போல் மீன்பிடித்தனர். அந்த நேரத்தில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், இவர்கள் இலங்கை கடற்பரப்பை அத்துமீறி கடந்ததாகக் கூறி அவர்களை கைது செய்து விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்ச்சியாக தமிழகம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடந்து வருவதால், மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.