தஞ்சாவூரில் நேர்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

Accident in Thanjavur claims 4 lives, tragic incident reported in Tamil Nadu


தஞ்சாவூரை சேர்ந்த நீதிபதி பூரணஜெய ஆனந்த் உடன் 6 பேர், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்று இன்று காலை சாமி தரிசனம் முடிந்து விட்டு தஞ்சாவூருக்குத் திரும்பும் போது, அவர்கள் வந்த கார் தூத்துக்குடி-மதுரை சாலையில், எட்டயபுரம் அருகே மேலக்கரந்தை பகுதியில் எதிரே வந்த  லாரியுடன் மோதி விபத்துக்குள்ளாக்கியுள்ளது

இந்த  விபத்தில் காரில் இருந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்கள் தஞ்சாவூரை சேர்ந்த வக்கீல் தனஞ்செயன் ராமமூர்த்தி, டிரைவர் வாசுராமநாதன் மற்றும் நீதிபதியின் பாதுகாவலராக வந்த போலீஸ்காரர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தகவலறிந்ததும், விளாத்திகுளம் டி.எஸ்.பி. அசோகன் தலைமையிலான மாசார்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று, படுகாயமடைந்தவர்களை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமயில்அனுமதித்துள்ளனர். இதில் ஒருவர் வழியிலேயே உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை நான்காக உயர்ந்தது.

நீதிபதி பூரண ஜெய ஆனந்த் உட்பட 2 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.