
இலங்கையில் இருந்து தமிழக கடற்கரை பகுதியில் சட்ட விரோதமாக நுழைய முயன்ற மூவர் தனுஷ்கோடி அருகே இந்திய கடலோர காவல்படையினரால் பிடிபட்டுள்ளனர்
கடலோர பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட வழக்கமான தேடுதல் பணியில் இந்த மூவரும் கடலுக்கு நடுவே சந்தேகத்துக்குரிய முறையில் பயணித்து வந்ததை கண்டுபிடித்தனர். உடனே அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
கைது செய்யப்பட்ட மூவரும் இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்றும், தமிழகத்திற்குள் கடத்தல் வேலைகளுக்கு துணைபுரிய வந்ததாக இலங்கை பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மூவரையும் தனுஷ்கோடி காவல் நிலையம் மற்றும் மாநில விசேட புலனாய்வு பிரிவு இணைந்து விசாரணை செய்து வருகிறது. இவர்களிடம் இருந்து மேலும் எந்த அளவுக்கு தகவல்கள் கிடைக்கும் என்பது law & order தரப்பில் கவனிக்கப்பட்டு வருகிறது.