
மதுரை மாவட்டத்தில் நடைபெற்றுள்ள பண மோசடி சம்பவம் ஒன்று தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்னமித்ரா ஏஜென்சிஸ் என்ற பெயரில் உணவு பொருட்களை மொத்தமாக விநியோகம் செய்து வரும் குமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்துள்ளது.
குமார் என்பவரிடன் கடந்த 2021 முதல் 2024 வரை பெஞ்சமின் என்ற நபர் தனது பீன் கபே கடைக்கான சிக்கன், ஐஸ்கிரீம் போன்ற பொருட்களை வாங்கி வந்துள்ளார்.
அதற்கான பணத்தை ஜிபே மூலம் அனுப்பியதாகக் கூறி, உண்மையில் பணம் செலுத்தாமல் போட்டோஷாப் செய்யப்பட்ட ஜிபே ஸ்க்ரீன் ஷாட்கள் அனுப்பி பல வருடங்களாக மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.
இந்த மோசடியால் மொத்தத்தில் ரூ.27,57,000 நஷ்டமடைந்ததாக புகார் எழுந்துள்ளது. சமீபத்தில் கணக்குகளை சரிபார்த்தபோது மோசடி கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் குமார் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், பெஞ்சமின் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.