
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள கீழ்விஷாரம் பகுதியில் வசித்து வந்த மூதாட்டி சுசிலா (வயது 80), தனது வீட்டிலுள்ள மாங்காய் தோப்பில் இருந்தபோது, கத்தியவாடி பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் (19) என்ற இளைஞர் மாலை 5 மணியளவில் அங்கு வந்துள்ளார்.
போதையில் இருந்த நந்தகுமார், மூதாட்டியிடம் அத்துமீறி நடந்ததோடு, பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
அதிர்ச்சியடைந்த சுசிலா, கூச்சலிட்டதோடு, தப்பிக்க முயன்றார். ஆனால், ஆத்திரமடைந்த நந்தகுமார், அவரை தரையில் தள்ளி, தரதரவென இழுத்துச் சென்றுள்ளார்.
இதனால் சுசிலாவுக்கு உடலில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்டிருந்ததையடுத்து ,இந்த காணொளிகள் சமூக வலைதளங்களில் பரவி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை கைப்பற்றி, வழக்குப் பதிவு செய்து நந்தகுமாரை கைது செய்துள்ளனர்.
இந்தக் கொடூரச் சம்பவம், பெண்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு என்பவற்றை கேள்விகுள்ளாக்கியுள்ளதுடன் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது