சுவற்றில் தலையை மோதி நபரொருவரை கொன்ற குற்றசாட்டில் 19 வயது திருநங்கை கைது!

"19-year-old transgender individual arrested for homicide by assault involving head injury against a wall."


சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்த 57 வயது சேகர், கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டில் இருந்த போது, 19 வயது திருநங்கை நந்திதா என்கிற ஜெசிக்கா, சேகரின் தலையை பிடித்து சுவற்றில் பலத்தமாக மோதியதாக கூறப்படுகிறது. இதில் தீவிர காயமடைந்த சேகர் உயிரிழந்தார்.

சம்பவத்துக்குப் பிறகு, போலீசார் நந்திதாவை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சேகர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதால் தாக்கியதாக நந்திதா வாக்குமூலம் அளித்தார். ஆனால், “எங்கள் அண்ணன் அப்படிப்பட்டவர் அல்ல” என்று சேகரின் சகோதரி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

மயிலாப்பூர் போலீசார், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.